இயேசு நல்லவரே இயேசு வல்லவரே | Yesu nallavarey

இயேசு நல்லவரே இயேசு வல்லவரே
அவர் சமூகம் என்முன் சென்றிடுதே

1. யோர்தான் பிரித்திடும் வழியும் தெரிந்திடும்
   செம்மையாய் நடந்து சென்றிடுவேனே
   சத்தமாய் துதித்து கர்த்தரை உயர்த்துவேன்
   கண்மணிபோல் என்னை காத்திடுவார் 

2. கண்ணீர் துடைத்திடும் கருணை நல்கிடும்
   கர்த்தரின் கரம் கண்டு மகிழ்த்திடுவேனே
   கர்த்தர் நல்லவர் என்பதை ருசிப்பேன்
   கடைசிவரை என்னை நடத்திடுவார்

2.  சபையும் நிலைத்திடும் சத்தியம் உயர்ந்திடும்
   சந்தோச வேகத்தில் பறந்திடுவேனே
   சாத்தான் வீழ்ந்திட கட்டுகள் அருந்திடும்
   சாட்சியாய் என்றும் என்னை நிறுத்திடுவார்

4. சீயோன் உயர்ந்திடும் செழுமை நிறைந்திடும்
   சீரிய சேவை கண்டிடுவேனே 
   வெற்றியின் கீதம் முழங்கிடும் சீயோன்
   இறங்கிடும் நாள் இதோ நெறுங்கிடுதே